உன்னைக் காண்கிறார் உன்
கண்ணீர் துடைக்கிறார் இயேசு
நீ அழ வேண்டாம்……..அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் உன்னை
1.
நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்
நொடிப் பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார் – நீ
2.
கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்
உடன் இருந்து நடத்திடுவார், ஒருபோதும் கைவிடார் – நீ
3.
எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் – நீ
4.
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள் – நீ
5.
கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு
நறிமணம் போல் பரவிடுவோம் நற்ச்செய்தி முழங்குவோம் – நீ